செய்திகள்

‘நீட்’ தேர்வால் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

தமிழக அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது என்று ஜவாஹிருல்லா கூறினார்.

கும்பகோணம்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு குறித்து தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டு அதை அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் இருந்துள்ளது என தகவல் வந்துள்ளது. மத்தியஅரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்காமல், அரசு சமூக நீதியில் இருந்து தவறி விட்டது. தற்போது நடைபெற்ற நீட் தேர்வில், முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது என்று பாதி சட்டையை கிழித்து தேர்வு எழுதும் இழிவான நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக துணிச்சல் இல்லாமல், தமிழர்களின் தன்மானத்தை காக்க தமிழகஅரசு தவறி விட்டது.

தமிழக நலனில் அக்கறையில்லாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில செயலாளர் கோவைஜாகீர், மாநில அமைப்பு செயலாளர் பாதுஷா, மாநில செயலாளர் முகமதுசெல்லப்பா, மாவட்ட செயலாளர் ராஜ்முகம்மது, மாவட்ட பொருளாளர்கள் முகமதுசலீம், அப்துல்ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT