செய்திகள்

குஜராத்: ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு சிறப்பான வரவேற்பு

குஜராத் மாநிலம் ஆகமதாபாத்துக்கு வந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திரிகள் அவரை வரவேற்றனர்.

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே 2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்துக்கு இன்று மதியம் வருகை தந்தார். இன்று மாலை அகமதாபாத்தில் இந்தியா- ஜப்பான் நாட்டு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில் இரு நாட்டு பிரதமர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

மேலும், நாளை அகமதாபாத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் மும்பை - அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்த ஜப்பான் பிரதமர் ஷ்ன்ஸோ அபேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடியும், மந்திரிகளும் வரவேற்றனர்.
ராணுவ வீரர்களின் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.