ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது. தற்போது அங்கு பதட்டம் நீங்கி வருவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு பயந்து பலர் கடைகளை திறக்காமல் உள்ளனர்.
இந்நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் பத்திரிக்கைகளில் காஷ்மீர் மாநில அரசு முழு பக்க விளம்பரத்தை நேற்று வெளியிட்டது.
அதில், “நாம் பயங்கரவாதிகளுக்கு அடிபணிய போகிறோமா? கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர். மக்களை ஏமாற்ற பயங்கரவாத அச்சுறுத்தலை பிரிவினைவாதிகள் பயன்படுத்தினர்.