செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - சோபியானில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் ஹிந்த் சிதாபோரா பகுதிய்ல் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.