செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சதோரா பகுதியில் உள்ள டிரால் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சதோரா பகுதியின் டிரால் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் இன்று அதிகாலை தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது அதிரடியாக என்கவுண்டர் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்

கொல்லப்பட்டனர்.

மேலும், அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்பதால், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.