செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அக்லர் கண்டி என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

பாதுகாப்பு படையினரை கண்டதும் தீவிரவாதிகள் சுட தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் சுட்டதில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தீவிரவாதிகளிடமிருந்து ஏகே47 உள்ளிட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.