செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் கடும் சண்டை- 6 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் நடந்த என்கவுண்டரில், பயங்கரவாதிகள் 6 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் இன்று காலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.