தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் 
செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - பட்காமில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ள சதோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.