ஜம்மு:
ஜம்மு- காஷ்மீரில் ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் முக்கிய சாலையாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திகழ்ந்து வருகிறது. இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். முக்கியமாக சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்லும்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில் இந்த வாரம் பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என்றும், பனிமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிமை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை ஜம்மு-காஷ்மீரில் மழை போன்று பனி கொட்டியது. இதனால் சாலையெங்கும் பனிக்கட்டியாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.