சென்னை:
மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 86-வது பிறந்த நாளை இன்று இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
சென்னையில் பல இடங்களில் அவர் உருவாக்கிய அக்னி ஏவுகணை படத்துடன் அப்துல்கலாம் படம் பொறித்த விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். பலர் அப்துல்கலாம் பேட்ஜூகளை சட்டையில் அணிந்து இருந்தார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் கொளத்தூரில் அப்துல்கலாம் பிறந்த நாளை கொண்டாடினார்கள். என் தேசம் என் உரிமை கட்சி ஒருங்கிணைப்பாளர் எபிநேசர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
200 பேர் கண்தானம் செய்தனர். 86 பேர் ரத்ததானம் செய்தனர். இலவச மருத்துவ முகாமும் நடந்தது. வீடு வீடாக நிலவேம்பு கசாயமும் வழங்கினார்கள். அப்துல்கலாமுக்கு மிகவும் பிடித்த திட்டமான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், துணை ஒருங்கிணைப்பாளர் கரோலின் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.