முல்லைப்பெரியாறு அணை 
செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக உள்ளது -மக்களவையில் ஜல்சக்தி துறை மந்திரி தகவல்

முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது என மத்திய ஜல்சக்தி துறை மந்திரி ஷெகாவத் கூறினார்.

மாலை மலர்

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள மாநிலம் இடுக்கி காங்கிரஸ் எம்பி, டீன் குரியகோஷ் கேள்வி எழுப்பினார்.

அணையின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?  அணையில் உடைப்பு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், கேரள மக்களுக்கு பேரிடராக அமையும் என்பதால் இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், என எம்பி குரியகோஷ் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப்பெரியாறு அணை எல்லா வகையிலும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்.