செய்திகள்

தாய்லாந்தில் அரச குடும்பத்தை அவமதித்த பார்வையற்ற பெண்ணுக்கு ஜெயில்

தாய்லாந்தில் அரச குடும்பத்தை விமர்சித்தது தொடர்பாக பார்வையற்ற பெண் ஒருவருக்கு 18 மாதங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

பாங்காக்:

தாய்லாந்தில் மன்னர் குடும்பம் குறித்து விமர்சனம் செய்வது கடும் குற்றமாக கருதப்படுகிறது. இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அரச குடும்பத்தை விமர்சித்ததாக பார்வையற்ற பெண் ஒருவருக்கு சமீபத்தில் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. அவரது பெயர் நுகுர்கயாதி மோஷி (23).

இவர் ‘பேஸ்புக்‘ சமூக வலை தளத்தில் பார்வையற்றவர்களுக்கு ஒளிபரப்பாகும் ஆடியோவில் தாய்லாந்து அரச குடும்பம் குறித்த கட்டுரையை கேட்டார். அது குறித்து விமர்சனம் செய்து ‘பேஸ்புக்‘கில் தனது கருத்துக்களை பதிவு செய்தார். இச்சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் நடந்தது.

அதை தொடர்ந்து அரச குடும்பத்தை அவமதித்து விமர்சித்ததாக மோஷி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது தான் தவறு செய்துவிட்டதாக கூறி மோஷி மன்னிப்பு கேட்டார்.

அறியாமல் செய்த தவறை மன்னித்து பார்வையற்ற தன்னை விடுதலை செய்யும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் பார்வையற்ற மோஷி மீது தான் பரிதாபபடுவதாக கூறிய நீதிபதி அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டார். அவரது ஜெயில் தண்டனையை 18 மாதங்களாக குறைத்து தீர்ப்பளித்தார்.