திருமலை:
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் பாதயாத்திரை சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க உள்ளார்.
மாநில முழுவதும் நடைபெற உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் பாதயாத்திரை சிறப்பாக அமையவேண்டி திருப்பதி அடுத்த அப்பலாய குண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் நகரி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா 1008 தேங்காய் உடைத்து வழிபட்டார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் உள்ள 13 மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த பாதயாத்திரையின் மூலம் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க உள்ளார். பாதயாத்திரை சிறப்பாக நடைபெற வேண்டி பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு 1008 தேங்காய் உடைத்து வழிபட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.