ஜெகன்மோகன் ரெட்டி 
செய்திகள்

ராஜசேகர ரெட்டியுடன் பலியான ஐஏஎஸ் அதிகாரி மகளுக்கு அரசு வேலை- ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியம் மகளுக்கு அரசு வேலை வழங்கி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

நகரி:

ஆந்திர முதல்வராக இருந்த ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பிரமணியம் என்பவரும் பலியானார்.

இந்த நிலையில் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்பிரமணியம் மகள் சிந்து வேலையின்றி தவிக்கும் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு வேலை வழங்க உத்தரவிட்டார். அதன்படி சிந்துவுக்கு துணை கலெக்டருக்கு இணையான அரசு பதவி வழங்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.