மதுரை:
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடந்து வருகிறது. ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.