செய்திகள்

ஜம்மு காஷ்மீர் அமைச்சரவை 30ம் தேதி மாற்றம் - நிர்மல்சிங்

ஜம்மு காஷ்மீர் அமைச்சரவை வரும் 30-ம் தேதி மாற்றியமைக்கப்பட உள்ளது என துணை முதல் மந்திரி நிர்மல் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 

காஷ்மீரில் கத்வா மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க.வை சேர்ந்த வனத்துறை அமைச்சர் சவுத்ரி லகால் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அமைச்சரவை வரும் 30-ம் தேதி மாற்றி அமைக்கப்பட உள்ளது என துணை முதல் மந்திரி நிர்மல் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிர்மல் சிங் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. இதில் ஒரு சில புது  மந்திரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 30ம் தேதி பிற்பகல் 12 மணிக்கு பதவியேற்க உள்ளனர் என தெரிவித்தார். #Tamilnews

SCROLL FOR NEXT