அதன்படி இத்தாலி அணி பிளேஆஃப் சுற்றில் சுவீடன் அணியை தொடர்கொண்டது. இரு அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தலா ஒருமுறை மோத வேண்டும். அதில் யார் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.
சுவீடனுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் இத்தாலிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற 2-வது லெக்கில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரு போட்டிகளையும் சேர்த்து சுவீடன் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது. 1958-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் கழித்து இத்தாலி உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றம் அளித்தது.