செய்திகள்

அமைச்சர்களுக்கு எதிராக கடிதம் கொடுத்தேனா? - அது பார்ட்டி சீக்ரெட் என்கிறார் மதுசூதனன்

ஆர்.கே.நகர் தோல்வி தொடர்பாக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் கொடுத்தாக வெளியான தகவல் குறித்து பேசிய மதுசூதனன், அது கட்சி ரகசியம் என்று தெரிவித்தார். #RKNagar #Madhusudhanan

மாலை மலர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வியை தழுவியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மதுசூதனன் 14 கேள்விகளை கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதில் தனது தேர்தல் தோல்விக்கு அமைச்சர் ஜெயக்குமாரே காரணம் என்று கூறியிருப்பதாகவும் தகவல் பரவியது.


மேலும், ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி மதுசூதனனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மதுசூதனன், ‘நான் கடிதம் கொடுத்தேனோ இல்லையா என்பது ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்.-க்கு தெரியும். என்னைப் பொறுத்தவரை அது பார்ட்டி சீக்ரெட். நான் கட்சியை நான் மதிப்பவன்.