பெரம்பலூர்:
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு தனியார் கல்விக்குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தின் கீழ் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.
இங்கு இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். அதே போல் திருச்சி, சமயபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த கல்வி குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகள் இயங்கி வருகிறது.
இந்த குழுமத்திற்கு சொந்தமான சுமார் 26 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கல்விக்குழும தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #tamilnews