செய்திகள்

சோதனையின்போது பெண் அதிகாரிக்கு மிரட்டல்: அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை புகார்

வருமான வரித்துறை சோதனையின்போது பெண் அதிகாரியை மிரட்டியதாக 2 அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்த சமயத்தில், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது, அவரது வீட்டில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதில், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம் தொடர்பான ஆவணமும் அடங்கும்.

வருமான வரி சோதனையின்போது, அமைச்சரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீட்டிற்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்களை சந்திப்பதற்காக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் மீது கடுமையாக குற்றம்சாட்டினார்.