ஜெர்மனியில் உள்ள சூல் நகரில் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.
நாளை வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு சில்வர் மற்றும் மூன்று வெண்கல பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 21 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தை பிடித்தது. இதில் 9 தங்க பதக்கம் அடங்கும்.
ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஒற்றையர் மற்றும் அணிகள் பிரிவில் இந்தியா தங்க பதக்கம் வென்றது. பெண்கள் அணி இதே பிரிவில் வெண்கல பதக்கம் வென்றது.