செய்திகள்

இந்தியாவில் இருந்து அடுத்த ஆண்டு சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்

இந்தியாவில் இருந்து அடுத்த ஆண்டு சூரியனை ஆராய ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #Sivan

மாலை மலர்

நாகர்கோவில்:

இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவன்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த சிவன், அவரது சொந்த ஊரான சரக்கல்விளையில் நடந்த கோவில் விழாவில் பங்கேற்றார்.

பானி புயல் குறிப்பிட்ட பகுதியில் கரையை கடந்து வருவதாக தகவல் வந்துள்ளது.

இதுபோன்ற புயல் பாதிப்பு ஏற்படும்போது, அதனை துல்லியமாக கணிக்க முயன்றதால் உயிர்ச்சேதம் உள்பட எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது.

சந்திராயன்-2 விண்கலம் வருகிற ஜூலை 9-ந்தேதி முதல் 16-ந்தேதிக்குள் விண்ணில் ஏவப்படும். செப்டம்பர் 6-ந்தேதி சந்திராயன்-2 விண்கலம் நிலவில் இறங்கும். நிலவின் தென்துருவத்தில் இறங்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளோம்.

சந்திராயன்-2 விண்கலம் தரை இறங்கியவுடன் நிலவின் நிலப்பரப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன் மூலம் புதிய தகவல்களை கண்டு பிடிக்க முடியும். அந்த கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவின் இஸ்ரோ மையம் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரியனை பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

சந்திரன், சூரியன் உள்பட பல்வேறு கிரகங்களை ஆராயும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டமும் செயல் பாட்டில் உள்ளது. இதனை செயல்படுத்த திட்ட வடிவமைப்பு நிறைவு பெற்றுள்ளது. வருகிற 2022-ம் ஆண்டிற்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும்.

இந்திய மாணவ-மாணவிகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி குறித்த சிறப்பு பயிற்சியை அளிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 108 மாணவ-மாணவிகளுக்கு இப்பயிற்சிகள் அளிக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #ISRO #Sivan