செய்திகள்

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் கண்டுபிடிப்பு

தகவல் தொடர்பை இழந்த ‘ஜிசாட்-6 ஏ’ செயற்கை கோளின் இடம் துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். #GSAT6A #GSLVF8

மாலை மலர்

இந்திய வின்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அதி நவீன தொலை தொடர்பு சேவைக்காக ‘ஜிசாட்-6 ஏ’ செயற்கை கோளை உருவாக்கியது.

2140 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-6 ஏ’ செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி. எப்8 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்தில் இருந்து கடந்த 29-ந்தேதி மாலை 4.56 மணிக்கு ஏவப்பட்டது.

இந்த செயற்கை கோள் புறப்பட்ட 17 நிமிடத்தில் விண்வெளி பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ‘ஜிசாட்-6 ஏ’ செயற்கை கோள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.


இந்த நிலையில் தகவல் தொடர்பை இழந்த ‘ஜிசாட்-6 ஏ’ செயற்கை கோளின் இடம் துல்லியமாக கண்டு பிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.