செய்திகள்

ஈரான் நாட்டின் ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது

தங்கள் நாட்டை உளவு பார்க்கவந்த ஈரான் நாட்டின் ஆளில்லா விமானத்தை இடைமறித்து இன்று சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

மாலை மலர்

ஜெருசலேம்:

தங்கள் நாட்டை உளவு பார்க்கவந்த ஈரான் நாட்டின் ஆளில்லா விமானத்தை இடைமறித்து இன்று சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

சிரியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் இன்று சுட்டு வீழ்த்தியதாகவும், இதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்களின்மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #tamilnews