10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றிரவு மும்பையில் நாடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மும்பை அணியின் சஞ்சு பிரதான் எதிர்பாராத விதமாக எதிரணியினருக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். இதனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் ஜேம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 79-வது நிமிடம் மும்பை அணியின் எவர்டன் சாண்டோஸ் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதைத்தொடர்ந்து 84-வது நிமிடம் ஜேம்ஷெட்பூரின் பிகாஷ் ஜெய்ரூ மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.