கொல்கத்தா:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய 56-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்காத்தா - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.
இப்போட்டியின் 44-வது நிமிடம் கொல்கத்தாவின் மார்டின் பாட்டர்சன் கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் 1-0 என கோல் கணக்கில் கொல்கத்தா முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் சென்னை அணியின் மெய்ல்சன் அல்வ்ஸ் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 64-வது நிமிடம் சென்னையின் ஜேஜே இரண்டாவது கோல் அடித்தார். இந்த கோல் சென்னை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இப்போட்டியில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிப்பட்டியலில், 23 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி - நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #HeroISL #ChennaiyinFC #AtheleticodeKolkata