செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து: அட்லெடிகோ டி கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு எப்.சி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தியது. #ISL2017 #BengaluruFC #AtheleticodeKolkata

மாலை மலர்

கொல்கத்தா:

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 63-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா - பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே கொல்கத்தா அணியின் ஜோர்டி மோண்டெல் எதிர்பாராத விதமாக எதிர் அணியினருக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 83-வது நிமிடம் பெங்களூரு அணியின் மிக்கு கோல் அடித்தார். அதன்பின் இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு எப்.சி. அணி 27 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் எப்.சி. கோவா - நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #ISL2017 #BengaluruFC #AtheleticodeKolkata