செய்திகள்

ஐ.எஸ்.எல் கால்பந்து: கோவாவை வீழ்த்தியது பெங்களூரு எப்.சி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 2-0 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது. #ISL2017 #banglorefc #FCGoa

மாலை மலர்

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று கோவாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. மற்றும் கோவா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி சார்பில் எடு கார்சியா 35-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். அதன்பின் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெங்களூரு அணி 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்களூரு அணியின் திமாஸ் டெல்காடோ 82-வது நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தார். இது பெங்களூரு அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதையடுத்து, பெங்களூரு எப்.சி. அணி 2-0 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, பெங்களுரு எப்.சி. அணி 33 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.