செய்திகள்

ராஜஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவாளி, 2 பாகிஸ்தானியர்கள் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளி மற்றும் உளவாளிகள் என்ற சந்தேகத்தின்பேரில் இரண்டு பாகிஸ்தானியர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்துள்ளனர். உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குஞ்சாரி கிராமத்தில் 55 வயதான ஹாஜி கான் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாஜி கான் பலமுறை பாகிஸ்தான் சென்று வந்திருப்பதும், இவருக்கு ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாஜி கானிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், சில காலமாக ஹாஜி கான் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கியிருந்தார். ஹாஜி கானை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சில இடங்களில் சோதனையும் மேற்கொண்டுள்ளனர்.