ஐ.சி.சி தற்போது பல மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இதில் முக்கியமான ஒன்று 13 அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் லீக். இந்த லீக்கை நடத்துவதற்கு ஐ.சி.சி. அதிக முயற்சி எடுத்து வருகிறது.
இந்த லீக் நடைபெற்றால் வருங்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது கடினம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தலைவர் சுதர்லேண்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
இருந்தாலும் இருநாடுகள் தங்களுக்கு இடையே எத்தனை போட்டிகள் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். வருங்காலத்தில் எந்த நாடும் மூன்று போட்டிகளுக்கு மேல் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடும் என்று நான் பார்க்கவில்லை. டி20 போட்டிகள் என்றால் கூடுதலாக நடத்தப்படலாம்.