செய்திகள்

இருக்கன்குடியில் மனைவியை தாக்கிய கணவர் கைது

இருக்கன்குடியில் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை தாக்கியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

இருக்கன்குடி தாலுகா கோட்டையூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 48) விவசாயி. இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த செல்வி என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அதன்பிறகு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செல்வி தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

அவரை குடும்பம் நடத்த வரும்படி ஜேம்ஸ் பலமுறை அழைத்தும் செல்வி வர மறுத்து விட்டார். சம்பவத்தன்று செல்வியை ஜேம்ஸ் கூப்பிடச் சென்றபோது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ், செருப்பால் தாக்கியதாக இருக்கன்குடி போலீசில் செல்வி புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டி வழக்குப்பதிவு செய்து ஜேம்சை கைது செய்தார்.