பிரதமர் மோடி 
செய்திகள்

இர்பான் கான் மரணம் சினிமா உலகிற்கு இழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

பாலிவுட் நடிகர் இர்பான் கானின் மரணம் சினிமா உலகத்துக்கு இழப்பு என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

இவர் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதற்கிடையே, இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மறைவு பாலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், பாலிவுட் நடிகர் இர்பான் கானின் மரணம் சினிமா உலகத்துக்கு இழப்பு என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், இர்பான் கானின் மரணம் சினிமா மற்றும் நாடக உலகிற்கு ஒரு இழப்பு. பல்வேறு ஊடகங்களில் அவரது பல்துறை நடிப்பால் அவர் நினைவுகூரப்படுவார் என பதிவிட்டுள்ளார்.