செய்திகள்

கொடைக்கானல் வீதிகளில் சாதாரணமாக செல்லும் இரோம் சர்மிளா

கொடைக்கானலில் யாருக்கும் அடையாளம் தெரியாததால் சாதாரண பெண் போல வீதிகளில் மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா வலம் வருகிறார்.

மாலை மலர்

கொடைக்கானல்:

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரோம் சர்மிளா. இவர் அந்த மாநிலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து பல வருடங்களாக போராடினார். அதனைத் தொடர்ந்து சிறை சென்று வெளியே வந்தார். தனது பல ஆண்டு கால போராட்டத்தை கை விட்டு கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

ஆனால் அவருக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கினார். நாடு முழுவதும் அறியப்பட்ட இரோம் சர்மிளா தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ளார்.

கொடைக்கானல் நகர மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கூட அவரை யார்? என தெரியவில்லை. இதனால் சாதாரண பெண் போல தலையில் ஸ்கார்ப் கட்டிக் கொண்டு குடை பிடித்தவாறு ஏ.டி.எம். மையத்தில் சென்று பணம் எடுப்பது, காய்கறி வாங்குவது, தனது வீட்டு தேவைகளுக்கு பயன்படும் பொருட்களை வாங்கி வருவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்.

அவருடன் தான் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த காதலனும் சென்று வருகிறார். இவர்களது திருமணம் இன்னும் சில நாட்களில் கொடைக்கானலிலேயே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.