செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் - ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் பலி

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கம் என கருதப்படக்கூடிய அன்னா நகரத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன. இந்த வான் தாக்குதலில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது உள்நாட்டுப் படைகளுடன், அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

ஆனாலும் தொடர்ந்து பாதுகாப்பு படைகளை குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்தப் படைகள் திணறி வருகின்றன.