செய்திகள்

விஹாரி சதம், அகர்வால் 95: விதர்பாவிற்கு எதிராக 330 ரன்களில் ஆல்அவுட் ஆனது ரெஸ்ட் ஆப் இந்தியா

இரானி கோப்பையில் விதர்பாவிற்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. விஹாரி சதம் அடித்தார். #IraniCup

டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் மயாங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அன்மோல்ப்ரீத் சிங் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மயாங்க் அகர்வால் உடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மயாங்க் அகர்வால் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் சதம் அடித்த ஹனுமா விஹாரி 114 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது ரெஸ்ட் ஆப் இந்தியா 186 ரன்கள் எடுத்திருந்தது.