இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி தோல்வி கண்டால் அடுத்த சுற்று வாய்ப்புக்காக நாளை நடைபெறும் புனே-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்து இருக்க வேண்டும். அதில் பஞ்சாப் அணி தோல்வி கண்டால் மட்டுமே ஐதராபாத் அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கும். முந்தைய லீக் ஆட்டங்களில் புனே மற்றும் டெல்லி அணிக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணி கடைசி லீக் ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உத்வேகத்துடன் களம் காணும்.
ஐதராபாத் அணியில் டேவிட் வார்னர் (535 ரன்கள்), ஷிகர் தவான் (450 ரன்கள்) ஆகியோர் ரன் குவிப்பில் முன்னிலையில் இருக்கின்றனர். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் (23 விக்கெட்டுகள்), சித்தார்த் கவுல் (15 விக்கெட்டுகள்), ரஷித் கான் (14 விக்கெட்டுகள்) ஆகியோர் எதிரணிக்கு சவாலாக விளங்கி வருகிறார்கள்.
குஜராத் அணி 13 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் எடுத்து 7-வது இடத்தில் இருக்கிறது. நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. குஜராத் அணியின் பேட்டிங்கில் சுரேஷ்ரெய்னா, ஆரோன் பிஞ்ச், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ரவீந்திர ஜடேஜா, பவுல்க்னெர் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது. குஜராத் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி சொந்த மண்ணில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.