ஐ.பி.எல். சீசன் 10 தொடரின் இறுதிப் போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது.