செய்திகள்

ஐ.பி.எல். ஏலம்: கோடிகளை அள்ளிய ரிஸ்ட் ஸ்பின்னர்கள்

பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ஏலத்தில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான ரஷித் கான், சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். #IPLAuction #WristSpinners

மாலை மலர்

பெங்களூரு:

11-வது சீசன் ஐ.பி.எல். தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் ஏலம் பெங்களூரு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தின் சுழல் பந்துவீச்சாளர்கள் பிரிவில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

ரிஸ்ட் ஸ்பின் என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வகை பந்துவீச்சுசாகும். பொதுவாக சுழல் பந்துவீச்சில், பந்தை ஸ்பின் செய்ய விரல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரிஸ்ட் ஸ்பின் முறையில் மணிக்கட்டு மூலம் பந்து ஸ்பின் செய்யப்படுகிறது. இது பந்து வீச்சின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ​​பந்துக்கு ஒரு எதிர்மறையான சுழற்சி அளிக்கிறது.

சர்வதேச டி-20 பவுலர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரஷித் கானை 9 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்து கொண்டது. இந்திய அணியின் இளம் ரிஸ்ட் ஸ்பின்னரான சஹாலை 6 கோடி ரூபாய் கொடுத்து பெங்களூரு ராயல் செலஞ்சர்ஸ் அணி தக்கவைத்து கொண்டது. இதேபோல மற்றொரு இந்திய ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5.80 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்து கொண்டது.

இது தவிர சுழல்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாஹிரை ரூ. 10 கோடிக்கும், கரன் சர்மாவை ரூ. 5 கோடிக்கும் சென்னை அணி ஏலம் எடுத்தது. பியூஸ் சாவ்லாவை ரூ. 4.20 கோடிக்கு கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது. அமித் மிஷ்ராவை டெல்லி அணி ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளர்களான ஆடம் சாம்பா, சாமுவேல் பத்ரி,  இஷ் சோடி ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #IPLAuction #WristSpinners #KuldeepYadav #Chahal #RashidKhan