குறிப்பாக தினேஷ் கார்த்திக்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கடந்த முறை குஜாராத் அணிக்காக 2.3 கோடி ரூபாய் ஏலம் போன, அவரின் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கை 7.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. கடந்த முறையை விட தினேஷ் கார்த்திக்குக்கு 5.1 கோடி ரூபாய் அதிகமாக கிடைக்கும்.
1 கோடி ரூபாய் அடிப்படை விலையான சஞ்சு சாம்சனை 8 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது. ராபின் உத்தப்பாவை 6.4 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டது.
அம்பதி ராயுடுவை 2.2 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. ஜோஸ் பட்லரை 4.4 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது.