கொல்கத்தா அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை 9.4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் தொடங்க இருந்த நிலையில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்டில் இருந்து விலகினார். சொந்த நாடும் திரும்பும் ஸ்டார்க், ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மாற்று வீரரை தேர்வு செய்ய வெண்டிய நிலையில் இருந்தது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரானை தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக டாம் குர்ரானை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தெரிவித்துள்ளது.