செய்திகள்

இந்திய அணிக்கு திரும்ப ஐபிஎல் பிளாட்பார்ம் அல்ல - அஸ்வின்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வின், சர்வதேச அணிக்கு திரும்பி ஐபிஎல் பிளாட்பார்ம் அல்ல என தெரிவித்துள்ளார். #IPL2018

மாலை மலர்

அஸ்வினை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்ததோடு, கேப்டனாகவும் நியமித்துள்ளது. அந்த அணியின் ஆலோசகரான சேவாக் இதை அறிவித்தார். கேப்டனாக செயல்படுவது குறித்து அஸ்வின் பேட்டியளித்தார். அப்போது இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கு ஐபிஎல் பிளாட்பார்ம் கிடையாது என கூறியுள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கு ஐபிஎல் தொடரை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நான் ஒவ்வொரு ஆண்டும் எப்படி ஐபிஎல் தொடருக்கு சென்றேனோ, அதே மனநிலையுடன்தான் செல்வேன்.