செய்திகள்

பாகிஸ்தான் எல்லை வேலியை கடந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதி முள்வேலியை கடந்து இன்று இந்தியாவுக்குள் நுழைய முயன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு மாநிலத்தின் ஆர்னியா பகுதியில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் வழக்கம்போல் இன்றும் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வேகமாக ஓடிவந்த சில தீவிரவாதிகள் முள்வேலியை கடந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். திரும்பிப் போகுமாறு எச்சரித்த  இந்திய பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு   தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும் ஜம்முவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.