செய்திகள்

ரூ.3,000 பட்ஜெட்டில் 4ஜி வோல்ட்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் ரூ.3000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இன்டெக்ஸ் நிறுவனத்தின் அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ வசதி, 5 இன்ச் FWVGA 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் சிப்செட், 1 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 2 எம்பி செல்ஃபி கேமரா, பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்ட்டு இருக்கிறது.

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் T1 லைட் சிறப்பம்சங்கள்:

- 5.0 இன்ச் 854x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே

- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்ப்பரெட்ரம் SC9832A பிராசஸர்

- 1 ஜிபி ரேம்

- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- டூயல் சிம் ஸ்லாட்

- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்

- 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 2 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 2200 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் ராயல் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ஷேம்பெயின் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.3,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.