செய்திகள்

புதுவையில் சர்வதேச பாய்மர படகு போட்டி இன்று தொடங்கியது

புதுவையில் 4 நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான பாய்மர படகு போட்டிகள் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி:

புதுவை அரசும், பிரெஞ்சு நாட்டு அரசும் இணைந்து புதுவையில் ஜனவரி 25-ஆம் தேதி முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் சர்வதேச அளவிலான பாய்மர படகு போட்டிகளை நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து போட்டியை இன்று தொடங்கி வைத்தார். மூன்று பிரிவுகளில் பாய்மரப் படகு போட்டிகள் நடைபெறுகின்றன. புதுச்சேரில் சர்வதேச பாய்மர படகு போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதில் இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 8 வயது முதல் 19 வயதுடைய போட்டியாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மேலும் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பிரெஞ்சு வீரர்களும் இதில் கலந்து கொண்டு பாய்மரப்படகு குறித்த பயிற்சியும் அளிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT