பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கோவை சாலை சக்தி மில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை சப்-கலெக்டர் காயத்திரி, தொழில்வர்த்தக சபைத்தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாபு ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பொள்ளாச்சி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சியில் சர்வதேச அளவிலான பலூன் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டு 4-வது முறையாக பலூன் திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. சுற்றுலா வளர்ச்சித்துறையும், பல்வேறு அமைப்புகளும் இணைந்து பலூன் திருவிழாவை நடத்திவருகிறது. தெற்கு ஆசிய அளவில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் 8 நாடுகளை சேர்ந்த பைலட்டுகளும் 12 பலூன்களும் பங்கேற்றன.
குறிப்பாக ரஜினியின் 2.0 படத்தின் பலூனும், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்பட்ட பலூனும் தமிழகத்திலேயே முதன்முறையாக பொள்ளாச்சியில் பறக்கவிடப்பட்டது.
பலூனில் பறக்க விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி பறக்கலாம். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.