செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சில் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள மாச்சில் பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.