செய்திகள்

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று இரவு ஊடுருவல்  முயற்சியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகளின் இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “நம்முடைய எல்லைப் பகுதியில் நேற்று இரவு பதுங்கி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தி தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர்” என்றார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ராணுவ வீரர்களின் அதிரடியான தாக்குதலால் தீவிரவாதிகளின் ஊடுருவல்  முயற்சி முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் ஊடுருவல்  முயற்சியில் ஈடுபடுவதும் அதனை ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.