அதிரடியாக ஆடிய ஹீலி - மூனி ஜோடி 
செய்திகள்

பெண்கள் உலக கோப்பை - இந்தியா வெற்றி பெற 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

மெல்போர்னில் நடைபெறும் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியி இந்தியா வெற்றி பெற 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஆஸ்திரேலியா.

மாலை மலர்

மெல்போர்ன்:

மகளிர் 20 ஓவர் உலக கோப்பையின் இறுதிப் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹீலி அரை சதமடித்தார். அவர் 75 ரன்னில்  அவுட்டானார்.

அதன்பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. ஆனாலும் மூனி சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். 

இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்துள்ளது. மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 78 ரன்களை சேர்த்தார்.