மயங்க் அகர்வால் - ரோகித் சர்மா 
செய்திகள்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பல சாதனைகள் படைத்த ரோகித் சர்மா, மயங்க் அகர்வால்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரோகித்சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி தொடக்க வீரர்களாக முக்கிய சாதனைகளை படைத்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் அடித்தது இதுவே முதல் முறையாகும். தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டிலேயே ரோகித் சர்மா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சொந்த மண்ணில் தொடக்க வீரராக களமிறங்கி முதல் போட்டியிலேயே இருவரும் சதம் அடித்து அசத்தி உள்ளனர்.

இது தவிர தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு ஷேவாக்-டிராவிட் ஜோடி சேப்பாக்கத்தில் 2008-ம் ஆண்டு 2-வது விக்கெட்டுக்கு 268 ரன் குவித்ததே சாதனையாகும். 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை ரோகித்சர்மா-அகர்வால் ஜோடி முறியடித்தன.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் எடுத்த டாப் 10 இந்திய ஜோடிகள் வருமாறு:-

SCROLL FOR NEXT