மழைக்காரணமாக மதிய 1.30 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மலின் அபார பந்து வீச்சால் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோலி (0) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ரகானே அவுட்டாகி வெளியேறும் காட்சி
இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துவைக்கப்பட்டது, புஜாரா 8 ரன்னுடனும், ரகானே 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்கல் 6 ஓவரில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பவுன்சர் பந்தை சஹா லீவ் செய்யும் காட்சி
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 15 நிமிடம் முன்னதாக 9.15-க்கே தொடங்கியது. இன்று 98 ஓவர்கள் வீசி முடிவு செய்யப்பட்டது.
புஜாரா, ரகானே ஆட்டத்தை தொடர்ந்தனர். ரகானே 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 4 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் புஜாரா நம்பிக்கையுடன் விளையாடினார்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் புஜாரா
6-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விக்கெட் கீப்பர் சகா ஜோடி சேர்ந்தார். இந்தியா 32.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. அதன்பின்பும் மழை தொடர்ந்து பெய்தது.
அஸ்வின், ரகானே விக்கெட்டை வீழ்த்திய சனகா